நீதிமன்ற உத்தரவு படி பொதுமக்களுக்கு நிலத்தை வழங்க கோரி கோவையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் தேர்தல் புறக்கனிக்க போவதாக பொதுமக்கள் அறிவிப்பு.
கோவை போத்தனூர் பாரத் நகரில் பொதுமக்களுக்கு சொந்தமான 4.51 ஏக்கர் நிலம் உள்ளது.இதில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த இடத்தை அரசு நிலமாக அறிவித்து அதற்காக உத்தரவை அதிகாரிகள் வழங்கி உள்ளனர்,இதனை எதிர்த்து பொதுமக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் பொதுமக்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது,இதனை அடுத்தும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அந்த நிலத்தை வழங்காததை கண்டித்து அப்பகுதிவாசிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,இந்நிலையில் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி அதிகாரிகள் மதிக்காமல் தங்களை அழைகளிப்பதாகவும்,அவர்கள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.

