கோவை: தேர்தல் சீட் ஒதுக்காததால் , ஆதித்தமிழர் பேரவையினர் வைகோவின் புகைப்படத்தை கிழித்து ஆர்ப்பாட்டம்.
ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நல கூட்டணியில் இனணந்ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக உறுதியளித்து இருந்தார்.
இந்நிலையில் ஆதித்தமிழர் பேரவைக்கு இடம் கொடுக்காமல் மக்கள் நல கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளுக்கே சீட் ஒதுக்கியதால் ,ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வைகோ மீது அதிருப்தி அடைந்த ஆதித்தமிழர் பேரவையினர் , வைகோவின் உருவ படத்தை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்,மேற்க்கு மாவட்ட ஆதிதிதமிழர் பேரவையின் செயலாளர் செஞ்சோலை ஏமாற்றிய ராமகிருஷ்ணன் மற்றும் வைகோவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு தலித்துக்கு எதிரான மக்கள் நல கூட்டணிக்கு எதிராக போராட்டம் தொடரும் என்றார் .
காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.