கோவையில் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி விஷம்
அருந்தி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது புகார்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் சி.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் தங்கவேலு மகன் வினோத்குமார் (31). மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாணி பவுடரைக் கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்ற வினோத்குமாரை நேற்றுமுன்தினம் மீட்ட அவரது உறவினர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவரது உறவினர்கள் வினோத்குமார் பெயரில் புகார் மனு ஒன்றை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். இதேபோல், காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனுவினை அளித்தனர்.
அதில், "கடந்த 18-ம் தேதி, வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவர் தன் மீது பொய்யான புகாரை ஆர்.எஸ்.புரம் போலீஸில் அளித்தார். புகார் தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராம், அழைத்து விசாரணை நடத்திய போது ஜாதிய அடிப்படையில் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வகையில் திட்டினார்.
தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு அவர் திட்டியதுதான் காரணம். சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மாநகர காவல் ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராம் கூறும்போது, " சம்பந்தப்பட்ட வினோத்குமார், கடந்த ஜனவரி மாதம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கவுரி என்ற பெண்ணிடம் குடித்துவிட்டுச் சென்று தகராறில் ஈடுபட்டதாக புகார் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண், தன்னை வினோத்குமார் மீண்டும் தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரில், வினோத்குமாரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்தேன். இந்நிலையில், வழக்கை திசை திருப்பும் நோக்கில் என் மீது புகார் அளித்துள்ளார்" என்றார்.