கோவை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்தறுக்கபட்ட நிலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் – செட்டிபாளையம் இடையே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக செட்டிபாளையம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றினர். அப்போது உயிரிழந்த்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்தறுக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டதும் தடையங்களை மறைக்க உடலில் மண்ணென்னெய் ஊற்றி எரித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு விசாரணை நடத்திய காவல்துறையினர் உயிரிழந்தவரின் கையில் போடப்பட்டிருந்த NPS என்ற எழுத்து கொண்ட மோதிரம் மற்றும் அவர் அருகில் கிடந்த மாருதி கார் சாவி ஆகியவற்றை வைத்தும் அப்பகுதியில் கார் வந்து சென்றதற்கான தடயங்களை வைத்தும் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த வருடம் இதே போல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் அப்பகுதியில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இரவு நேரங்களில் செட்டிப்பாளையம் காவல்துறையினர் ரோந்து பணிகளில் மேற்கொள்ள வேண்டும் எனவும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.