கோவை: வறுமையின் காரணமாக கோவையைச் சேர்ந்த தந்தை குழந்தைகள் மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த இடையர்பாளையம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தர்வர் ராஜெந்திரன்.
மனைவியை பிரிந்த இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுகேஷ், பிரபா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வறுமையில் நீண்ட நாட்களாக
சிரமப்பட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மனமுடைந்த ராஜேந்திரன் செவ்வாய்கிழமை இரவு குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் அதனை சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து குழந்தைகளின் சத்தத்தை அடுத்து அருகில் இருந்தவர்கள் முவரையும் மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் குழந்தைகளும், காலையில் ராஜேந்திரனும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இதனை அடுத்து மூன்று பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளது.வறுமையின் காரணமாக மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.