கோவை: பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கொண்டு
சென்ற ரூ. 1,34,00,000 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று
பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது, பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற காரினை சோதனை செயிதனர். அதில், கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அஸ்ஷரப் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ. 1,34,00,000 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தினை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.