கோவை: கஜானா ஜீவல்லரியில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஜானா ஜீவல்லரியில் வருவாய் ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் உள்ள காஜானா ஜீவல்லரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள கஜானா ஜீவல்லரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 8.30 மணி முதல் நடைபெற்று வரும் இச்சோதனையில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளாதா என அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்களும் கணக்கில் வராத பணங்களும் கைபற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.