கல்விக்கடன்
செலுத்தாதவர்கள் வங்கி தேர்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, கோவையில்
பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர்
கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 17 ஆயிரத்து 140 காலி பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் வங்கிகடன் பெற்ற மாணவர்கள் அதை திரும்ப செலுத்தவில்லை எனில் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிபந்தனை பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த நிபந்தனையை திரும்ப பெறக்கோரி, கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள அந்த வங்கி கிளையை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்விக்கடன் பெற்ற ஏழை, எளிய மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைத்த பின்னர் தான், கல்விக்கடனை திரும்ப கட்ட முடியுமெனவும், பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு ஏழை, எளிய மாணவர்களை பாதிக்குமெனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் வங்கியில் பெற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்ளை திரும்ப செலுத்தாமல் இழுத்தடித்து வரும் நிலையில், ஏழை, எளிய மாணவர்களின் கல்விகடனை உடனடியாக செலுத்த வேண்டுமென நிர்பந்திக்கும் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பேட்டி : கு.ராமகிருட்டிணன் – பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்