தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ,
இன்று வேட்புமன்னு தாக்கல் துவங்கியது. கோவையில் உள்ள 10 சட்டமன்ற
தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக
அந்தந்த தொகுதிகளில் வேட்புமனு தக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவையில் முதல் நபராக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள இந்திய கம்யூனிஸ்ட்- மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேல்முருகன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கோவை துடியலூர் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாச்சியார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முனியாண்டியிடம் அவர் வேட்புமனுவை சமர்பித்து உறுதி மொழி ஏற்றார்.
இவரை தொடர்ந்து அத்தொகுதி பா.ஜ.க வேட்பாளரான நந்தகுமார் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான செல்வகுமார் , சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் கொட்டு முரசு ஒலிக்க வருவாய் கோட்டாச்சியார் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய நந்தகுமார், பாஜ.க அரசின் செயல்திட்டங்கள் மூலம் கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் வளர்ச்சிக்காக செயல்படுவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.
இதேபோல கோவை சூலூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பாக போட்டியிட உள்ள கவிதா மற்றும் அதே தொகுதிக்கு சுயட்சியாக போட்டியிட உள்ள நடராஜன் என்பவரும் இன்று சூலூர் தாலூக்கா அலுவலகத்தில் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாளான இன்று கோவையில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வருகின்ற திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வது சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.