கோவை: தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோவை வடவள்ளியில் சனிகிழமை (23/04/16) நடைபெற்றது.

கூட்டத்தில் தேமுக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதாக பொது மக்கள் தெரிவித்தனர். முன்னதாக கோவை இந்தியாவின் மான்செஸ்டர் ஆக இருந்தது. ஆனால் இப்பொழுது, மானங்கெட்ட நிலையில் உள்ளது.
கோவையை விட பரப்பளவில் சிறிய நாடு பெங்காங். அங்கே 300 பாலங்கள் உள்ளன. ஆனால், கோவையில் இன்னும் 4 பாலங்கள் இருந்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். ஆனால் முந்தைய அரசால் அதை செய் முடியவில்லை.

மேலும், சிலர் திராவிட கட்சிகளிடம் முரட்டு பணம் இருக்கிறது என்று தன்னை மிரட்டினர். ஆனால் என்னிடம் தமிழக மக்களின் முரட்டு மனம் இருக்கிறது.
இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம். இதில் தர்மம் வெற்றி பெற வேண்டும்.
மருதமலை ஆறுமுகன் போல இது ஆறுமுக கூட்டணி என்று கூறினார். முன்னதாக வேட்பாளர்களின் பெயர்களை படித்து அறிமுகம் செய்து வைத்தார்.