கோவை:சூலூர் விமான படை தளத்தில் பணியாற்றும் விமான படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கோவையில் பரபரப்பு
கோவை அடுத்த சூலூர் பகுதியில் விமானபடை தளம் உள்ளது. இதில் ராணுவ வீரர்களுகளுக்கு பயிற்சி அளிக்க கூடிய போர் விமானங்கள், அதிநவீன படை தளம் உள்ளது.
இதில் கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த பிரவீன் என்கிற படை வீரர் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விடுமுறையில் இருந்து மீண்டும் நேற்று இரவு பணிக்கு திரும்பினார். இன்று காலை 9.40 மணியளவில் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த மெகரா என்கிற பகுதியில் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தார்.
அந்த சமயத்தில் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்ற அவர், வலது கண்ணில் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு சுமிதா என்ற மனைவி இருப்பதாகவும், அவருக்கு தகவல் கொடுத்து உடனடியாக விமான படை தளத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து அவரை சூலூர் விமான படை தளத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருப்பதாக கூறினர். இது குறித்து சூலூர் விமான படை தளத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் துறையினரும் அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.