கோவை திருமலையாம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினரை
கண்டித்து துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு செல்ல மாட்டோம் என தரையில்
அமர்ந்து தற்போது தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நேற்று அப்பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அங்கு உள்ள தலித்மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அப்போது வாக்குகேட்க அனுமதிக்காமல் பொது மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து திங்கள்கிழமை மாலை அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட சிலர் மது அருந்திவிட்டு அப்பகுதிக்கு சென்று ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடுமையாக மிரட்டியதாகவும் அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.
இதனால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ரகளையில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்யும் வரை துப்புரவு பணியில் ஈடுபடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.