கோவை
மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை முத்துவிற்கு
எதிராக அவரது சகோதரி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இன்று வேட்பு மனு
தாக்கல் செய்துள்ளார்.
கோவை, சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சிங்கை முத்து அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சகோதரி பிரபாவதி. இன்று காலை தனது சகோதரருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுவதாக தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். சிங்கை முத்துவிற்கு கோவையில் மட்டும் 200 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து உள்ளதாகவும், ஆனால் தன் அம்மாவிற்கு சொந்தமான, தனக்கு சேர வேண்டிய 10 செண்டு இடத்தை தனக்கு தர மறுப்பதாகவும், இதுகுறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பிரபாவதி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் வேறுவழியின்றி தேர்தலில் போட்டியிட்டு, சிங்கை முத்துவிற்கு எதிராக பிரச்சராம் செய்து தோற்கடிக்க உள்ளதாகவும் பிரபாவதி தெரிவித்துள்ளார்.