கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு. ந. கார்த்திக் வேட்புமனு தாக்கல்.
தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களை நானே நேரில் சென்று சந்திப்பேன் என கோவையில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் நா.காத்தி தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து கடந்த 22 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் கோவையின் அனைத்து சட்டமன்ற தொகுதி அலுவலகத்திலும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் மேயர் நா.கார்த்தி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய திமுக வேட்பாளர், அதிமுக ஆட்சியில் கோவையயில் வளர்ச்சி பணிகள் நடைபெற வில்லை எனவும் 400 கோடி அளவில் செய்யப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் என்னை சந்திக்க வேண்டாம் மக்களை நானே நேரில் சென்று சந்திப்பேன் என உறுதியளித்தார்.அதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக சிங்காநல்லூர் தொகுதிக்கு கார்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் அதே பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.