சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2
பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் நமஸ்கரித்தான்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறைகள் சேதமடைந்து 2 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகாசியில் இருந்து வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்தில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு உற்பத்தி செய்யும் சிவகாசியில் இதுபோன்ற வெடிவிபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.