கோவை தொண்டாமுத்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து அக்கட்சியின் மகளிர் அணித்தலைவி பிரேமலாதா குணியமுத்தூர் பகுதியில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், உள்ளாட்சி துறை அமைச்சரின் தொண்டாமுத்தூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் இங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தரப்படும் மேலும் உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதே பகுதியில் பலநாட்களாக போராடிவரும் சி.பி.எம்.கல்லூரி மாணவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்து பேசிய அவர், இங்குள்ள குளம் குட்டைகள் தூறுவாரப்படும் எனவும் வைதேகி நீர்வீழ்ச்சி சுற்றுலா தளமாக அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். பின்னர் பேசிய அவர், லஞ்ச ஊழலுக்ககு அப்பாற்பட்டு மக்கள் நல்ல தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் டாஸ்மார்க் மட்டுமே வளர்ச்சி பெற்றிருப்பதாக கூறிய அவர், அதனால் மக்களின் நிலை நூறு சோறு பீரு என்றிருப்பதாக தெரிவித்தார். மேலும் திமுக அதிமுக கொள்ளை ஆட்சியை அகற்றி முற்றுப்புள்ளி வைத்து புதிய சகாப்தம் படைத்து நமது முரசை நாளை தமிழக அரசாக மாற்றுவோம் என வலியுறுத்தினார்.