குற்றவழக்குகளை மறைத்ததிற்காக கோவை தெற்கு தொகுதி அதிமுக
வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜூனன் மீது காவல்நிலையத்தில் குற்ற வழக்குப் பதிவு
செய்ய வேண்டும் என சி.பி.எம் கட்சி வேட்பாளர் தேர்தல் நடத்தும்
அலுவலர் காந்திமதியிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுகளை தாக்கல் செய்து வந்தனர். நேற்றுடன் மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வேட்புமனு சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
இதில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜூனன் மீது நில மோசடி மற்றும் கொலை முயற்சி என இரு குற்றவழக்குகள் உள்ளதாக அத்தொகுதி வேட்பாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அம்மன் கே.அர்ஜூனன் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் குற்றவழக்குகள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இரு குற்ற வழக்குகள் இருப்பதாக புகார் வந்ததையடுத்து வேட்பு மனு பரிசீலனையில் வைக்கப்பட்டது.
குற்றவழக்குகளை மறைத்ததிற்காக அம்மன்.கே.அர்ஜூனன் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சி.பி.எம் , கட்சி வேட்பாளர் பத்மநாபன் தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திமதியிடம் புகார் அளித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பரீசீலனைக்கு பின்னர் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
பேட்டி- பத்மநாபன், சி.பி.எம், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்