கோவையில் நேற்று (05/01/16) ஜெயலலிதா பிரசாரம்:
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள், கேரளத்தில் போட்டியிடும் 7 அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்ட 23 பேரை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஜெயலலிதா பரப்புரை உரையாடல்:
தொழிலாளர்களின் நிலை உயர எனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன்.
நான் சொன்னதையும் செய்தேன், சொல்லாததையும் செய்தேன்.
சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இங்கு வந்துள்ளேன்.
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உங்கள் ஆதரவால் நான் முதல்வராக பெறுப்பேற்றேன்.
திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்களுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தியது என் தலைமையிலான அதிமுக அரசு தான்.
திமுக அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது.
2011ம் ஆண்டில் நான் ஆட்சிக்கு வந்த பிறகு மின்சாரம் தொடர்பாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுகவினர் வாக்கு கேட்டு உங்களிடம் வருவார்கள்.
அதிமுக அரசு எதையுமே செய்யவில்லை என கூசாமல் பொய் சொல்வார்கள்.
தமிழகத்தில் முதன்முதலாக உலக முதலீ்ட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து பலருக்கு வேலை கிடைத்துள்ளது.
திரு. கருணாநிதியும், அவரது மகனும் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியே இல்லை என்று கூறி வருகின்றனர்.
கருணாநிதியும், திமுகவினரும் வாக்கு கேட்டு வருகையில் அவர்கள் செய்த ஊழல்களை சொல்லி விரட்டியடியுங்கள்.
செய்வீர்களா? இதை செய்வீர்களா?
திமுக ஆட்சியில் எப்படிப்பட்ட மின்வெட்டுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டீர்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.
பல அரசியல் கட்சி தலைவர்களும் மது விலக்கு பற்றி பேசி வருகிறார்கள்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.