கோவை, அவினாசி சாலையில், பயனீயர் மில், பன்மால் அருகில் நேற்று 01-05-16 ஞாயிறு அதிகாலை 1.00 மணியளவில் நடந்த சாலை விபத்து.
திருப்பூரை சேர்ந்த கெளதம், வயது 29, மற்றும் இவர் நண்பர் கோவையை சேர்ந்த தீபக் காந்த் வயது,28, இவர்கள் இருவரும் ஜென்னிகிளப்பில் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு BMW காரில் வீடு திரும்புகையில் அதிவேகமாக கட்டுப்பாடு இன்றி வந்துள்ளனர்.
பயனீயர் மில் அருகில் வரும்பொழுது அவ்வழியாக வந்த ஒரு மொபெட் மீது கார் மோதியதில் கட்டுப்பாடு இழந்து பக்கத்தில் இருக்கும் ரோடு டிவைடர் மீது மோதி பக்கவாட்டில் சாய்ந்து உருண்டு கவிழ்ந்தவாறே சிறிய தூரம் சென்று டிவைடரில் மோதி நின்றுள்ளது. மொபெட்டில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணம். இவர் பெயர் கான்லீ, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிகின்றார். பணிமுடிந்து வீடு திரும்புகையில் விபத்தில் சிக்கிக்கொண்டார்.
அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இவர்களை மீட்டு அருகில் இருந்த PSG மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காரில் வந்த இருவரில் ஒருவர் அங்கேயே மரணம். இவர் பெயர் தீபக் காந்த், கோவையை சேர்ந்தவர். இவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.
இன்னொருவர் திருப்பூரை சேர்ந்த கெளதம் (திருப்பூர் ஏஞ்சல் ஓட்டல், ஏஞ்சல் கல்லூரி உரிமையாளர் மகன்) அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி மரணம். இவருக்கு ஒரு வருடம் முன்புதான் திருமணம் ஆகி உள்ளது. காதல் திருமணம், கலப்பு திருமணம். இவர் மனைவி மருத்துவர்.
கட்டுப்பாடு அற்ற அதிவேகமும், கவனகுறைவும்தான் இதற்க்கு மிகமுக்கிய காரணம் என காவல்துறையினர் கூறுகின்றனர். அதனால்தான் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட BMW காரைக் கூட உடனே பிரேக் அடித்து நிறுத்த முடியவில்லை. சுற்றிலும் காற்றுப்பைகள் இருந்தும் காரில் வந்தவர்களின் உயிர்களை காப்பாற்ற முடியவில்லை.