தமிழகம் மற்றும் புதுவைக்கு தனிதனி தேர்தல் அறிக்கை.
தமிழக தேர்தல் அறிக்கை:
தமிழக தேர்தல் அறிக்கை:
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை.
- மீனவர்களுக்கான நிவாரணத் தொகை 5 ஆயிரமாக உயர்வு.
- வியாபாரிகள் எவ்வித இடையூறுமின்றி வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி விவசாயி கடன் வழங்கப்படும்.
- தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
- மகபேறு உதவித்தொகை 18ஆயிரமாக உயர்த்தப்படும்.
- சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு வழங்கப்படமாட்டாது.
- ஸ்கூட்டர் வாங்க மகளிருக்கு 50 சதவீதம் மானியம்.
- ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை.
- மடிக்கணிணியுடன் கட்டணமில்லா இணையதள வசதி.
- 100 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசம்.
- லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.
- மாணவர்களின் கல்வி கடன் ரத்து.
- செட் ஆப் பாக்ஸ் இலவசம்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கைபேசி.