கோவை
கருப்பகவுண்டர் வீதியில் கார்பைடு கல் வைத்து மாம்பழம் பழுக்க
வைக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் விஜயனுக்கு தகவல்
அளிக்கப்பட்டதன் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி,வேலுச்சாமி
ஆகியோ தலைமையில் அதிகாரிகள் கருப்பகவுண்டர் வீதியில் நடத்தப்பட்ட சோதனையில்
நாசர் என்பவரது பழ குடோன் மற்றும் ஏ.டி.ஆர் பழக்கடையில் கார்பைடு கல்
வைத்து பழுக்க வைக்கப்பட்ட 60 ஆயிரம் மதிப்பிலான 1.50 டன் மாம்பழங்கள்
பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து அவைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு
கொண்டு செல்லுப்பட்டு அழிக்கப்பட்டது.இது குறித்து உணவு பாதுகாப்பு
அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.