தவறான சிகிச்சையால் கோவையில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

தவறான சிகிச்சையால்   கோவையில் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும், சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேஷ் , இவருக்கு சுதா என்ற மனைவியும்ஈஸ்வரன் மற்றும் தீபக் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் நேற்று 4 வயது சிறுவனான தீபனுக்கு காது வலி ஏற்பட்டுள்ளது.

எனவே அருகே  சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனியார்காது மூக்கு தொண்டை  சிறப்பு மருத்துவமனைக்கு   முருகேஷன் அழைத்து சென்றுள்ளார். அப்போது காதை சுத்தம் செய்த  மருத்துவர் இரண்டு ஊசியை சிறுவனுக்கு செலித்தி உள்ளார்.  அப்போது சிறுவன் மயங்கி விழ,  முருகேஷனை உடனேமருந்து வாங்கி வருமாறு அனுப்பி உள்ளார். அச்சமயம்  மருத்துவர் சிறுவன் தீபக்கின் உடலை எடுத்து வந்து  கோவை அரசு மருத்தவ கல்லூரி மருத்துவமனையில் விட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.

தகவல் அறிந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் சிறுவன் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து தவறான சிகிச்சை காரணமாகவே சிறுவன் உயிரிழந்துள்ளான் என கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். இச் சம்பவம் காரணமாக கோவை சாய்பாபாகாலனி காவல்நிலையத்தில்   சிறுவனின் இறப்பில் மர்மம்  இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சிறுவன் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்கவேண்டும், தவறான சிகிச்சை செய்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி- சந்துரு, சிறுவனின் மாமா

Students, teachers and parents celebrate Checkpoint milestone at Spectrum Northern Lights School, Coimbatore

Spectrum Northern Lights School in Coimbatore celebrated its Primary Checkpoint Examination results, recognising student...

Union MoS Muralidhar Mohol reviews Coimbatore Airport expansion works

Union Minister of State for Civil Aviation Muralidhar Mohol held discussions with airport officials at Coimbatore Airpor...

Dr S Rajasekaran receives Bharat Ratna Lata Mangeshkar Vaidyak-Ratna Award

Ganga Hospital Chairman Dr S Rajasekaran was honoured as the first recipient of the Bharat Ratna Lata Mangeshkar Vaidyak...

Union Budget 2026 lays roadmap for manufacturing, MSMEs and skills: CII Southern Region

CII Southern Region said Union Budget 2026–27 provides policy support for manufacturing, MSMEs, agriculture and skills,...

1054 Park Group students set world record in e-waste awareness drive

A total of 1054 students from Park Group of Institutions created a world record in Coimbatore by identifying and categor...

From kolams to Silambam: Harvest Fiesta lights up VIBGYOR High, Coimbatore

VIBGYOR High Coimbatore celebrated Harvest Fiesta 2026 with a vibrant Pongal event featuring traditional décor, cultural...