தமிழக முதல்வராக 6வது முறை பதவியேற்கும் முதல்வர ஜெயலலிதா, பதவியேற்பு
முடிந்து தலைமை செயலகம் செல்கிறார். அங்கு அவர் ஐந்து கோப்புகளில்
கையெழுத்திடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மொத்தம் ஏழு கோப்புகள் தயாராக உள்ளன. அதில் 5 கோப்புகளில் இன்று முதல்வர் கையெழுத்துடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மகளிர் நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று தன்னுடைய முதல் கையெழுத்திடுகிறார்.
- அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தாலிக்கு தங்கம் திட்டத்தில் முதல் கையெழுத்திடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் 4 கிராம் தங்கம் வழங்கிவந்த நிலையில், இந்த முறை அதனை 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகப்பேறு காலத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதமாக இருந்துவரும் பேறுகால விடுமுறையை 9மாதமாக உயர்த்தி வழங்கு கோப்பில் கையெழுத்திடுகிறார்.
- மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு வழங்கிவரும் 12 ஆயிரம் அரசு உதவி தொகையை 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் ஆணையில் கையெழுத்து.
- விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோப்பில் முதல்வர் கையெழுத்திடுகிறார்.