கோவை சூலூரில் நாளை முதல் 'தாரங் சக்தி' பயிற்சி: 51 நாடுகளுக்கு அழைப்பு

கோவை சூலூரில் ஆகஸ்ட் 6 முதல் 14 வரை 'தாரங் சக்தி' பயிற்சி நடைபெறுகிறது. 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பத்து நாடுகளின் விமானப்படை விமானங்கள் பங்கேற்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நாளை (ஆகஸ்ட் 6) முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 'தாரங் சக்தி' பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க மொத்தம் 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளின் விமானப்படை விமானங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளன. இந்த பயிற்சியின் 2ம் கட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவும் இந்த பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா பங்கேற்கவில்லை. இந்த பயிற்சி உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் திறமையை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

பயிற்சி நடக்கும் போது சூலூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இரு இடங்களில் "மேட் இன் இந்தியா" கண்காட்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...