புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்‌ பயன்பெற வரும் நவ., 29ம் தேதிக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌ : மாநகராட்சி ஆணையர்‌

கோவை : கோவை மாநகராட்சியில்‌ புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்‌ பயன்பெற ஓய்வூதியம்‌ பெறுவோர்‌ மற்றும்‌ வாரிசுதாரர்கள்‌ புகைப்படத்துடன்‌ வரும் நவம்பர் 29ம் தேதிக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில்‌ ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ (வாழ்க்கை துணை உட்பட) / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அரசாணை எண்‌ 222 நிதி (ஓய்வூதியத்துறை) நாள்‌.30.06.2018, அரசாணை எண்‌.73 ந.நி.கு.வ.துறை (ந.ப.3) நாள்‌.28.05.2019 படியும்‌ மற்றும்‌ மாநகராட்சி மாமன்ற தாமான எண்‌ 133 நாள்‌ 19.07.2019-ன்‌ படியும்‌, 01.10.2019 முதல்‌ புதிய மருத்துவ காப்பீடு திட்டம்‌ யுனைடெட்‌ இந்திய இன்சூரன்ஸ்‌ கம்பெனி மூலமாக இம்மாநகராட்சியில்‌ அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சியில்‌ ஓய்வூதியம்‌ பெற்று வரும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ (வாழ்க்கை துணை உட்பட சோந்த புகைப்படம்‌) / குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ புகைப்படத்துடன்‌ (Annexure Form 4) படிவம்‌ 4னை பூர்த்தி செய்து வரும் நவம்பர் 29 தேதிக்குள்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ சமாப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...