வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான விழிப்புணர்வு மற்றும்‌ சிறப்பு பதிவு முகாம்‌ - மாவட்ட ஆட்சியர்

கோவை: இங்கிலாந்து நாட்டில்‌ உள்ள அரசு மருத்துவமனைகளில்‌ (National Health Service, UK) Doctors, Diploma and BSc. Degree (Male/Female) Nurses போன்ற பணியாளர்களை பணியமர்த்தும்‌ பொருட்டு IELTS பயிற்சி அளிக்க இந்நிறுவனம்‌ ஏற்பாடு செய்துள்ளது. செவிலியர்களுக்கு மாதச்சம்பளம்‌ ரூ.2,00,000/- ஆகும்‌.

கோவை: இங்கிலாந்து நாட்டில்‌ உள்ள அரசு மருத்துவமனைகளில்‌ (National Health Service, UK) Doctors, Diploma and BSc. Degree (Male/Female) Nurses போன்ற பணியாளர்களை பணியமர்த்தும்‌ பொருட்டு IELTS பயிற்சி அளிக்க இந்நிறுவனம்‌ ஏற்பாடு செய்துள்ளது. செவிலியர்களுக்கு மாதச்சம்பளம்‌ ரூ.2,00,000/- ஆகும்‌.

ஓமன்‌ நாட்டிலுள்ள ஒரு முன்னணி தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிய 21 வயது முதல்‌ 35 வயதிற்குட்பட்ட Electrician, Electrical Technician & OH Lineman பெருமளவில்‌ தேவைப்படுகிறார்கள்‌. மாதச்சம்பளம்‌ தகுதி மற்றும்‌ அனுபவத்திற்கேற்றவாறு வழங்கப்படும்‌. மேலும்‌ 21 வயது முதல்‌ 35 வயதிற்குட்பட்ட ITI தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவமுள்ள Fitters பெருமளவில்‌ தேவைப்படுகிறார்கள்‌. மாத ஊதியம்‌ ரூபாய்‌ 28,000/- ஆகும்‌.

சவூதி அரேபியா நாட்டில்‌ ஒரு முன்னணி தனியார்‌ மருத்துவமனைக்கு Male & Bsc Nurses பெறுமளவில்‌ தேவைப்படுகிறார்கள்‌. மாத ஊதியம்‌ ரூபாய்‌ 62,000 முதல்‌ 71,000/- வரை ஆகும். Female Lab Technician and X Ray Technicians - மாத ஊதியம்‌ ரூபாய்‌ 66,500/-, Female Sonographer — மாத ஊதியம்‌ ரூபாய்‌ 71,250/- ஆகும்‌

குவைத்‌ நாட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்கு பெண்‌ பணியாளர்கள்‌ (Female Domestic Workers) பெருமளவில்‌ தேவைப்படுகிறார்கள்‌. மாத ஊதியம்‌ ரூபாய்‌ 25,800/- முதல்‌ ரூபாய்‌ 28,000/- வரை, வயது வரம்பு 31 முதல்‌ 45 வரை ஆகும்‌

மேலே தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான பதிவு முகாம்‌ 22.11 2019 மற்றும்‌ 23.11.2019 (வெள்ளிக்கிழமை மற்றும்‌ சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையம்‌, மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர். என்ற அலுவலகத்தில்‌ காலை 9.00 முதல்‌ மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

இச்சிறப்பு பதிவு முகாமில்‌ பதிவு செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்‌ தங்களின்‌ சுய விவரங்கள்‌ அடங்கிய விண்ணப்பத்துடன்‌ கல்வி மற்றும்‌ அனுபவச்சான்றிதழ்‌, பாஸ்போர்ட்‌ ஆகியவற்றின்‌ நகல்கள்‌ மற்றும்‌ இரண்டு புகைப்படத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும்‌ பணிக்காலியிடம்‌ மற்றும்‌ பதிவு கட்டணம்‌ குறித்த விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம்‌ மூலமாகவும்‌ - www.omemanpower.com மற்றும்‌ 044-22505886/22502267/ 5220634389/ 9566239685 என்ற தொலைபேசி எண்கள்‌ மூலமாகவும்‌ அறிந்து கொள்ளலாம்‌. இந்நிகழ்ச்‌சியில்‌ மனுதாரர்கள்‌ பெருமளவில்‌ கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்‌ என கோவை மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள் அறிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...