அம்மா இரு சக்கர வாகனம்‌ பெற வயது வரம்பு 45-ஆக உயர்வு..! தகுதிவாய்ந்தோர்‌ பயன்பெற கோவை மாவட்ட ஆட்சியர்‌ வேண்டுகோள்‌

கோவை: கோவை மாவட்டத்தில்‌, உழைக்கும்‌ மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ்‌ மானியம்‌ பெற தகுதியானவர்கள்‌ உடனடியாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டத்தில்‌, உழைக்கும்‌ மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ்‌ மானியம்‌ பெற தகுதியானவர்கள்‌ உடனடியாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

2019-20-ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்தின்கீழ்‌ மகளிர்‌ பயன்பெறும்‌ பொருட்டு, விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ்‌ மானியம்‌ பெற தற்போது வயது வரம்பு 45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தோருக்கு இத்திட்டத்தின்கீழ்‌ மானியத்‌ தொகை ரூ.25000,- அல்லது வாகனத்தின்‌ விலையில்‌ 50% இவற்றில்‌ எது குறைவோ அது வழங்கப்படும்‌. மாற்றுத்திறனாளி பயனாளிகள்‌ எனில்‌ ரூ.31,250,- வரை மானியம்‌ வழங்கப்படும்‌. கியர்‌இல்லாத 12506 திறனுக்கு மிகாத வாகனத்தை மட்டுமே (ஸ்கூட்டர்‌ வகை மாடல்கள்‌) வாங்க வேண்டும்‌.

இந்த வாகனங்கள்‌ உழைக்கும்‌ மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசு அலுவலகங்களில்‌ சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில்‌ பணிபுரியும்‌ அங்கன்வாடி பணியாளர்கள்‌, சத்துணவு பணியாளர்கள்‌, கூட்டுறவு சங்கங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ போன்ற பெண்கள், அமைப்பு மற்றும்‌ அமைப்பு சாரா நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ பெண்கள்‌, வர்த்தகம்‌ தனியார்‌ நிறுவனங்களில்‌ பணியாற்றுவோர்‌, தொண்டு நிறுவனங்கள்‌,/சமுதாய அமைப்புகளைச்சார்ந்த பெண்கள்‌ மற்றும்‌ சுய தொழில்‌ செய்யும்‌ பெண்கள்‌ ஆகியோர்‌ இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ்‌ மானியம்‌ பெற விண்ணப்பிக்கலாம்‌.

இத்திட்டத்தின்கீழ்‌ மானியம்‌ பெற 18 வயது முதல்‌ 45 வயது வரையில்‌ உள்ள பெண்களில்‌ ஒட்டுநர்‌ உரிமம்‌ மற்றும்‌ பழகுநர்‌ உரிமம்‌ வைத்துள்ளவர்கள்‌ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌. ஆண்டு வருமானம்‌ 2.50 இலட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌. கல்வித்‌ தகுதி தேவையில்லை, மலைவாழ்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, கணவனை இழந்த பெண்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌, திருமணமாகாத பெண்கள்‌ (முதிர்கன்னிகள்‌), தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள்‌ ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. 

விண்ணப்பங்கள்‌ கிடைக்கும்‌ இடம்‌:

விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும்‌ இல்லை. மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்‌, பேரூராட்சி அலுவலகங்கள்‌, நகராட்சி அலுவலகங்கள்‌, மாநகராட்சி அலுவலகம்‌, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்‌ ஆகிய இடங்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்‌.

தேவைப்படும்‌ ஆவணங்கள்‌: 

இத்திட்டத்தின்கீழ்‌ பயன்‌ பெற கீழ்க்கண்ட ஆவணங்கள்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. வயதிற்கான சான்றிதழ்‌, இருப்பிடச்‌ சான்றிதழ்‌ (ஆதார்‌ அட்டை, ஓட்டுநர்‌ உரிமம்‌, வாக்காளர்‌ அடையாள அட்டை இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்று), ஒட்டுநர்‌ உரிமம்‌, பணி விவரம்‌ மற்றும்‌ வருமானச்‌ சான்றிதழ்‌ (பணிபுரியும்‌ இடத்திலிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்‌), சுயதொழில்‌ புரிவோர்‌ அதற்கான சுய வருமான சான்றிதழ்‌, கடவுச்சீட்டு அளவு புகைப்படம்‌ ஆகியவற்றை விண்ணப்பத்துடன்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. இத்திட்டத்தை தகுதிவாய்ந்த அனைவரும்‌ பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...