கோவை மாநகராட்சிப்‌ பள்ளிகளில்‌ 2020-21-ம்‌ கல்வியாண்டிற்கான மாணவர்‌ சேர்க்கைக்கு இணைய வழியில்‌ பதிவு செய்யலாம் - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சிப்‌ பள்ளிகளில்‌ 2020-21-ம்‌ கல்வியாண்டிற்கான 1-ம்‌ வகுப்பு முதல்‌ 9-ம்‌ வகுப்பு வரை மாணவர்‌ சேர்க்கைக்கு இணைய வழியில்‌ பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிப்‌ பள்ளிகளில்‌ 2020-21-ம்‌ கல்வியாண்டிற்கான 1-ம்‌ வகுப்பு முதல்‌ 9-ம்‌ வகுப்பு வரை மாணவர்‌ சேர்க்கைக்கு இணைய வழியில்‌ பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப்பள்ளிகள் (6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை), 11 உயர்நிலைப்பள்ளிகள்‌ (6 முதல்‌ 10-ம்‌ வகுப்பு வரை), 1 நடுநிலைப்பள்ளி (6 முதல்‌ 8-ம்‌ வகுப்பு வரை), 13 உயர்‌ தொடக்கப்பள்ளிகள்‌ (1 முதல்‌ 8-ம்‌ வகுப்பு வரை), 42 ஆரம்ப பள்ளிகள்‌ (1 முதல்‌ 5-ம்‌ வகுப்பு வரை மற்றும்‌ காது கேளாதோர்க்கான ஒரு உயர்நிலைப்பள்ளி (ஆண்களுக்கு மட்டும்‌ இலவச உணவு மற்றும்‌ தங்கும்‌ வசதி) ஆக மொத்தம்‌ 84 பள்ளிகள்‌ மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

தற்போது 2020-21-ம்‌ கல்வியாண்டிற்கான 1 முதல்‌ 9-ம்‌ வகுப்பு வரையிலான தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில வழியில்‌ மாணவர்‌ சேர்க்கை இணைய வழியில்‌ நடைபெற்று வருகிறது. சிறந்த கட்டிட வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஸ்மார்ட்‌ வகுப்பறைகள்‌, சிறப்பு பயிற்சிகள்‌ (யோகா, கராத்தே முதலானவை) நன்கு பயிற்சி பெற்ற அனுபவம்‌ மற்றும்‌ திறமை வாய்ந்த ஆசிரியர்களால்‌ மிகச்‌ சிறப்பான à®®à¯à®±à¯ˆà®¯à®¿à®²à¯‌ கல்வி கற்பிக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புகளைக்‌ கொண்ட மாநகராட்சிப்‌ பள்ளிகளில்‌ தங்கள்‌ குழந்தைகளைச்‌ சேர்க்க பெற்றோர்கள்‌ விவரங்களை https://forms.gle/9caEWry7YaW679xG6 என்ற link-ல்‌ இணைய வழியில்‌ உள்ளீடு செய்யலாம்‌.

மேலும்‌, மாணவர்‌ சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 96429-51127 மற்றும்‌ 94420-75061 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவி்த்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...