நாளை நடக்கவிருக்கும் மருத்துவ பரிசோதனை முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

கோவை: கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌ நாளை மருத்துவ முகாம்கள்‌ அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளது.

கோவை: à®•ோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்‌ தொடர்ச்சியாக, மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌ மருத்துவ முகாம்கள்‌ அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாளை 11.07.2020 அன்று காலை 10.00 மணியளவில்‌ மருத்துவ முகாம்கள்‌ நடைபெறும்‌ இடங்கள்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாம்‌ நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ நேரம்‌ அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம்‌ அறிவிக்கப்படுகிறது. இம்முகாமில்‌ சளி, இருமல்‌, காய்ச்சல்‌, உடல் வலி, வயிற்று போக்கு உள்ளவர்கள்‌ பரிசோதனை செய்து கொள்ளலாம்‌.

குறிப்பாக, 55 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌ மற்றும்‌ இருதய நோயாளிகள்‌, நுரையீரல்‌, சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள்‌ மற்றும்‌ தொற்று அறிகுறி உள்ளவர்கள்‌ என பல கட்டங்களில்‌ பல்ஸ்‌ மீட்டர்‌ மற்றும்‌ தெர்மல்‌ ஸ்கேன்‌ பரிசோதனை செய்யப்படுகிறது.

மேற்கண்ட, அறிகுறிகள்‌ உள்ளவர்கள்‌ இந்த பரிசோதனை முகாமில்‌ கலந்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கேட்டுக்‌ கொள்கிறார்‌.

வடக்கு மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் பீளமேடு - அண்ணா நகர்‌, விளாங்குறிச்சி - விரியம்பாளையம்‌, நீலிக்கோணாம்பாளையம்‌ - பாரத்‌ நகர்‌, செட்டியார்‌ தோட்டம்‌, கணபதி மாநகர்‌ - மாணிக்கவாசக நகர்‌, கணபதி - அருள்நகர்‌, எல்‌.எல்‌.ஹவுஸ்‌, துடியலூர் - கலைஞர்‌ நகர்‌, வெள்ளகிணர்‌- அலகு நகர்‌ ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும்.

தெற்கு மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ தெலுங்கு பாளையம்‌ - முனியப்பன்‌ நகா்‌, செல்வபுரம்‌ - சாவித்ரி நகா்‌, குனியமுத்தூர்‌ - நேதாஜி நகர்‌ - குளத்துப்பாளையம்‌, போத்தனூர்‌ - சாய்‌ நகா்‌, குறிச்சி - மேட்டூர்‌, தொண்டாமுத்தூர் -பாடசாலை வீதி.

மேற்கு மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ ராம்குர்பாய்‌ அம்மாள் -மருதாசலம்‌ வீதி, பூமார்க்கெட்‌, மீனாட்சி ஹோம்‌ சக்தி நகர்‌, கே.கே.புதூர்‌ தோபி கானா வீதி, கவுண்டம்பாளையம்‌ - அசோக்‌ நகா்‌, கீழ்பகுதி கவுண்டம்பாளையம்‌, சீரநாயக்கன்பாளையம்‌-திலகர் வீதி, கல்வீராம்பாளையம்‌ - கணபதி நகர்‌, IOB காலனி, வடவள்ளி-எம்‌.ஜி.ஆர்‌.நகர்‌ ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும்.

கிழக்கு மண்டலம்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ சிங்காநல்லூர்‌-நஞ்சப்ப செட்டியர்‌ வீதி, நஞ்சுண்டாபுரம்‌-ரகுமான்செட்காலனி, செளரிபாளையம்‌- அண்ணாநகர்‌, உப்பிலிபாளையம்‌- ஐயர்‌ லே-அவுட்‌, கிருஷ்ணாபுரம்‌, ராமநாதபுரம்‌- ராமலிங்க ஜோதி நகர்‌ ஆகிய இடங்களில் நடைபெறும்.

மத்திய மண்டலம்

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ சீதாலட்சுமி (SLM) - வி.சி.வி.ரோடு, பட்டுநூல்‌-கங்காதரன் வீதி, ஜெயில்‌ ரோடு (JRM) - பட்டாளம்மன்‌ கோவில்‌ வீதி, ஆவாரம்பாளையம்‌, இரத்தினபுரி- சுப்பாத்தாள்வீதி, இராஜவீதி - பாரதி நகர்‌, சி.டி.எம்‌ ஹோம்‌- 1,2 மற்றும்‌ 3-வது SNR வீதி, வாலாபாய்‌ வந்தீராவன்‌ (VVM Home)- பஜனை கோவில் வீதி ஆகிய இடங்களில்‌ நடைபெறவுள்ளது.

மேற்கண்ட, இடங்களில்‌ நடைபெறும்‌ மருத்துவ முகாம்களில் பொதுமக்கள்‌ தவறாமல்‌ பயன்படுத்தி நோய்த்‌ தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்‌ கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌ 1077, 0422-2302323, 9750554321.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...