கோவை மாநகராட்சியில் நாளை மருத்துவ பரிசோதனை முகாம்கள்‌ நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



கோவை: கோவையில் நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்‌ மாநகராட்சி நிர்வாகம்‌ பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்‌ தொடா்ச்சியாக, மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌ மருத்துவ முகாம்கள்‌ அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நாளை 15.07.2020 அன்று காலை 10.00 மணியளவில்‌ மருத்துவ முகாம்கள்‌ நடைபெறும்‌ இடங்கள்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.32-ல்‌ அம்பேத்கர் நகர்‌, வார்டு எண்‌.33-ல்‌ புதுக்காலனி, வார்டு எண்‌.34-ல்‌ கருப்பராயன்‌ பாளையம்‌, வார்டு எண்‌.35-ல்‌ அவினாசி ரோடு, அத்திக்குட்டை, வார்டு எண்‌.36-ல்‌ பாலாஜி நகர்‌, வார்டு எண்‌.37-ல்‌ லட்சுமி நகர்‌, வார்டு எண்‌.56-ல்‌ காடுவெட்டி நாயுடு லே-அவுட்‌, வார்டு எண்‌.57-ல்‌ காந்தி நகர்‌ உப்பிலிபாளையம்‌, வார்டு எண்‌.58-ல்‌ மதுரை வீரன்‌ வீதி நீவிக்கோணாம்பாளையம்‌, வார்டு எண்‌.59-ல்‌ கண்ணபிரான்‌ நகர்‌. வார்டு எண்‌.60-ல்‌ எஸ்‌.எம்‌.எஸ்‌.லே-அவுட்‌, வாடு எண்‌.61-ல்‌ நெசவாளர்‌ காலனி, வார்டு எண்‌.62-ல்‌ கிருஷ்ணம்மாள்‌ லே-அவுட்‌, வார்டு எண்‌.63-ல்‌ போயர்‌ வீதி, வார்டு எண்‌.64-ல்‌ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிங்காநல்லூர்‌. வார்டு எண்‌.65-ல்‌ அண்ணா நகா்‌ உடையாம்பாளையம்‌, வார்டு எண்‌.66-ல்‌ தொட்டச்சியம்மன்‌ வீதி மற்றும்‌ கோயில்‌ வீதி ஆகிய இரு இடங்கள்‌, வார்டு எண்‌.67-ல்‌ பூசாரியம்மன்‌ கோவில்‌ வீதி, வார்டு எண்‌.69-ல்‌ காமராஜர்‌ நகா்‌, வார்டு எண்‌.75-ல்‌ இலாகி நகர்‌ ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும். 

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.5-ல்‌ அசோக்நகர்‌, வார்டு எண்‌.6-ல்‌ காமராஜர்‌ நகர்‌, வார்டு எண்‌.7-ல்‌ காந்திநகர்‌, வார்டு எண்‌.8-ல்‌ மாரியம்மன்‌ கோவில்‌ வீதி, வார்டு எண்‌.9-ல்‌ அம்பேத்கர்‌ நகா்‌, வார்டு எண்‌.10-ல்‌ பெரியார்‌ நகர்‌, வார்டு எண்‌.11-ல்‌ கே.கே.புதூர்‌ பாலசுப்ரமணியம்‌ வீதி, வார்டு எண்‌.14-ல்‌ என்‌.ஜி.ஆர்‌.வீதி கோவில்மேடு மற்றும்‌ தடாகம்‌ சாலை வேலாண்டிபாளையம்‌ ஆகிய இரு இடங்கள்‌, வார்டு எண்‌.15-ல்‌ பி.என்‌.புதூர்‌ உயாநிலைப்பள்ளி, வார்டு எண்‌.16-ல்‌ புது தில்லை நகா்‌, வார்டு எண்‌.17-ல்‌ பொம்மனாம்பாளையம்‌ தெற்கு 1605, வார்டு எண்‌.18-ல்‌ சத்யா காலனி வாணி இல்லம்‌, வார்டு எண்‌.19-ல்‌ பொங்களுர்‌ ICDS, வார்டு எண்‌.20-ல்‌ டாங்க்பெட்‌ லேன்‌ சுகர்கேன்‌ ரோடு, வார்டு எண்‌.21-ல்‌ பூசாரிபாளையம்‌ நாய்க்கன்‌ தோட்டம்‌, வாடு எண்‌.22-ல்‌ காமராஜபுரம்‌ 4-வது வீதி, வார்டு எண்‌.23-ல்‌ வெங்கடசாமி சாலை, வார்டு எண்‌.24-ல்‌ சுப்பிரமணியம்‌ சாலை பலிஜநாயட் கல்யாண மண்டபம்‌ மற்றும்‌ மேதர்‌ காலனி ஆகிய இரு இடங்களில் நடைபெறும். 

அதேபோல, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.1-ல்‌ நஞ்சப்பா நகா்‌ துடியலூர், வார்டு எண்‌.2-ல்‌ வி.சி.எஸ்‌.நகர்‌ துடியலூர், வாடு எண்‌.3-ல்‌ சுப்பிரமணியம்பாளையம்‌, வார்டு எண்‌.4-ல்‌ அப்பநாயக்கன்பாளையம்‌, வார்டு எண்‌.26-ல்‌ பேஸ்‌-2 வெள்ளக்கிணறு, வார்டு எண்‌.27-ல்‌ முருகன்‌ நகர்‌, சின்னவேடம்பட்டி, வார்டு எண்‌.28-ல்‌ அங்கன்வாடி மையம்‌ சரவணம்பட்டி, வாடு எண்‌.29-ல்‌ ஜனதா நகா்‌ சரவணம்பட்டி, வார்டு எண்‌.30-ல்‌ விநாயகபுரம்‌ சரவணம்பட்டி, வார்டு எண்‌.31-ல்‌ அம்மன்‌ நகர்‌ சரவணம்பட்டி, வார்டு எண்‌.38-ல்‌ எல்லைத்தோட்டம்‌ சாலை பீளமேடு, வார்டு எண்‌.39-ல்‌ பாரதி காலனி பீளமேடு, வாடு எண்‌.40-ல்‌ ஆவாரம்பாளையம் அங்கன்வாடி மையம்‌, வார்டு எண்‌.41-ல்‌ காந்திமாநகர்‌ காவலர்‌ குடியிருப்பு பின்புறம்‌, வார்டு எண்‌.42-ல்‌ அங்கன்வாடி மையம்‌ உடையாம்பாளையம்‌, வார்டு எண.43-ல பொன்விழா நகர் உருமண்டாம்பாளையம்‌, வார்டு எண்‌.44-ல்‌ புது தோட்டம்‌ 3வது வீதி நல்லாம்பாளையம்‌ ரோடு, வார்டு எண்‌.46-ல்‌ அன்னை மூகாம்பிகை நகர்‌, வார்டு எண்‌.47-ல்‌ தரணி நகர்‌ கணபதி புதூர்‌, வார்டு எண்‌.55-ல்‌ செங்காடு பி.என்‌.பாளையம்‌ ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 

மேலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.76-ல்‌ முத்துசாமி காலனி, வார்டு எண்‌.77-ல்‌ சொக்கம்புதூர்‌, வார்டு எண் 78-ல்‌ செல்வபுரம்‌ ஹவுசிங்‌ யூனிட்‌, வார்டு எண்‌.79-ல்‌ லாரி ஸ்கீம்‌ ரோடு, வார்டு எண்‌.85-ல்‌ செட்டி வீதி வார்டு ஆபிஸ்‌ அருகில்‌, வார்டு எண்‌.86-ல்‌ ரோஸ்‌ கார்டன்‌, வார்டு எண்‌.87-ல்‌ காந்தி நகர்‌, வார்டு எண்‌.88-ல்‌ கங்கா நகர்‌ 2வது வீதி, வார்டு எண்‌.89-ல்‌ பள்ளிக்கூட வீதி காமாட்சியம்மன்‌ கோவில்‌ மைதானம்‌ சுண்டக்காமுத்தூர்‌, வார்டு எண்‌.90-ல்‌ அய்யப்பன்‌ கோவில்‌ கோவைப்புதார்‌, வாடு எண்‌.91-ல்‌ கே.பி.ஆர்‌.காலனி குளத்துப்பாளையம்‌, வார்டு எண்‌.92-ல்‌ செந்தமிழ்‌ நகா்‌ சுகுணாபுரம்‌ கிழக்கு, வார்டு எண்‌.93-ல்‌ இடையா்பாளையம்‌ பிரதான சாலை குனியமுத்தூர்‌, வார்டு எண்‌.94-ல்‌ திருநகர்‌ பாலாஜி திருமண மண்டபம்‌ அருகில்‌, வார்டு எண்‌.95-ல்‌ இட்டேரி வீதி, வார்டு எண்‌.96-ல்‌ மாணிக்க சேர்வை வீதி, வார்டு எண்‌.97-ல்‌ கொண்டி காலனி, வார்டு எண்‌.98-ல்‌ முத்தையா நகர்‌, வார்டு எண்‌.99-ல்‌ கோணவாய்க்கால்பாளையம்‌, வார்டு எண்‌.100-ல்‌ கணேசபுரம்‌ ஆகிய இடங்களில் நடைபெறும். 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.25-ல்‌ லிங்கப்ப செட்டி சந்து, வார்டு எண்‌.45-ல்‌ கண்ணப்ப நகர்‌ 1-4, வார்டு எண்‌.48-ல் ஜி.பி.எம்‌. லே-அவுட்‌, வார்டு எண்‌.49-ல்‌ நஞ்சப்பன்‌ வீதி, வார்டு எண்‌.50-ல்‌ காந்தி நகர்‌, வார்டு எண்‌.51-ல்‌ சொர்ணாம்பிகா லே-அவுட்‌, வார்டு எண்‌.52-ல்‌ காவலர்‌ குடியிருப்பு, வார்டு எண்‌.53-ல்‌ ஹரிபுரம்‌, வார்டு எண்‌.54-ல்‌ ஆர்‌.என்‌.தோட்டம்‌, வார்டு எண்‌.68-ல்‌ என்‌.ஏ. தேவர்‌ காலனி, வார்டு எண்‌.70-ல்‌ அலமேலு மங்கம்மாள்‌ லே-அவுட்‌, வார்டு எண்‌.71-ல்‌ பி.ஆர்‌.எஸ்‌ குடியிருப்பு, வார்டு எண்‌.72-ல்‌ ஆடிஸ்‌ வீதி, வார்டு எண்‌.73-ல்‌ ஹை வேஸ்‌ காலனி, வார்டு எண்‌.74-ல்‌ ரூபா நகர்‌, வார்டு எண்‌.80-ல்‌ இடையர்‌ வீதி, வார்டு எண்‌.81-ல்‌ இரத்தினம்‌ வீதி, வார்டு எண்‌.82-ல்‌ வின்சென்ட்‌ ரோடு, வார்டு எண்‌.83- ல்‌ கருப்பகவுண்டார்‌ வீதி, வார்டு எண்‌.84-ல்‌ தர்மராஜா கோவில்‌ வீதி ஆகிய இடங்களில்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாம்‌ நடைபெறும்‌ இடம்‌ மற்றும்‌ நேரம்‌ அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம்‌ அறிவிக்கப்படுகிறது. இம்முகாமில்‌ தொடர்‌ சளி, இருமல்‌, காய்ச்சல்‌ உள்ளவர்கள்‌ பரிசோதனை செய்து கொள்ளலாம்‌. 

குறிப்பாக, 55 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌ மற்றும்‌ இருதய நோயாளிகள்‌, நுரையீரல்‌, சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள்‌ மற்றும்‌ தொற்று அறிகுறி உள்ளவர்கள்‌ என பல கட்டங்களில்‌ பல்ஸ்‌ மீட்டர்‌ மற்றும்‌ தெர்மல்‌ ஸ்கேன்‌ பரிசோதனை செய்யப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகள்‌ உள்ளவர்கள்‌ இந்த பரிசோதனை முகாமில்‌ கலந்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கேட்டுக்‌ கொள்கிறார்‌.

மேற்கண்ட இடங்களில்‌ நடைபெறும்‌ மருத்துவ முகாம்களை பொதுமக்கள்‌ தவறாமல்‌ பயன்படுத்தி நோய்த்‌ தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்‌ கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌ 1077, 0422-2302323, 9750554321.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...