கோவையில் இருந்து பாலக்காடு, மங்களூர் வழியாக ஹரியானா மாநிலத்திற்கு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்கம்!

கோவை: கோவையில் இருந்து பாலக்காடு, மங்களூர், உடுப்பி, கோவா, அகமதாபாத், ஜோத்பூர் வழியாக ஹரியானா மாநிலத்திற்கு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து பாலக்காடு, மங்களூர், உடுப்பி, கோவா, அகமதாபாத், ஜோத்பூர் வழியாக ஹரியானா மாநிலத்திற்கு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஹிஷார்‌ இடையே

வாராந்திர குளிர்சாதன சிறப்பு விரைவு ரயில்‌ இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது

அதன்படி, ஹிஷார்‌ ரயில்‌ நிலையத்தில்‌ இருந்து புதன்கிழமைகளில்‌ பகல்‌

12:50க்கு புறப்படும்‌ 02475 கோவை

சிறப்பு ரெயில், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல்‌ 2:40க்கு கோயம்புத்தூர்‌ வந்து சேரும்‌. (ஹிஷார்‌ ரயில்‌ நிலையத்தில்‌ இருந்து டிசம்பர்‌ 23ம்‌ தேதி முதல்‌ ஜனவரி 27ம்‌ தேதி வரை)

மறுமார்கத்தில்‌, கோவையில்‌ இருந்து சனிக்கிழமைகளில்‌ பிற்பகல்‌ 3 மணிக்கு புறப்படும்‌ 02476 ஹிஷார்‌ சிறப்பு ரயில்‌, திங்கட்கிழமைகளில்‌ மாலை 4 மணிக்கு ஹிஷார்‌ சென்றடையும்‌. (கோவையில்‌ இருந்து டிசம்பர்‌ 26ம்‌ தேதி! முதல்‌ ஐனவரி 31ம்‌ தேதி வரை)

முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...