ஆங்கில புத்தாண்டையொட்டி மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை கலெக்டர் அறிவிப்பு

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு, மனமகிழ் மன்றங்கள், விமானநிலைய உணவகங்கள், தமிழ்நாடு ஓட்டல், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட மதுபான உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் உள்ள மதுக்கூடங்கள் வருகிற 31-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை.



கோவை: கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு, மனமகிழ் மன்றங்கள், விமானநிலைய உணவகங்கள், தமிழ்நாடு ஓட்டல், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட மதுபான உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் உள்ள மதுக்கூடங்கள் வருகிற 31-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை.

விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்களை விற்பனை செய்தல் மற்றும் மதுக்கூடங்கள் செயல்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...