கோவை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : 30,62,744 வாக்காளர்கள்..!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 35,551 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, கோவையில் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக, 37,667 பேர் முதல் வாக்காளர்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 35,551 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, கோவையில் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக, 37,667 பேர் முதல் வாக்காளர்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு கோவை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பெயர் பட்டியலை வெளியிட்டார்.



இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன், மற்றும்

தி.மு.க, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ஜ.க உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியதாவது:-



கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 2970733 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன் பின், நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் தொடர்பாக 127562 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல், 35551 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல்படி கோவை மாவட்டத்தில் 15,09531 ஆண் வாக்காளர்கள், 15,52799 பெண் வாக்களர்கள், 3-ம் பாலினத்தவர் 414 என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 37,667 பேர் முதல் வாக்காளர்கள் ஆகும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...