கோவை மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் 18,492 பேர், மொத்த வாக்காளர்கள் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 பேர்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களும் பெறப்பட்டன.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

இதையடுத்து, துணை வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, 10 ஆயிரத்து 279 ஆண்கள், 10 ஆயிரத்து 546 பெண்கள், 19 மூன்றாம் பாலினத்தவர்கள் என 20 ஆயிரத்து 844 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில், 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 18 ஆயிரத்து 492, ஆகும். உயிரிழப்பு, முகவரி மாற்றம் மற்றும் இரட்டைப்பதிவு போன்ற காரணங்களால் 1560 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது- கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மாவட்டத்தில் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 பேர் இருந்தன. தற்போது, வாக்காளர் எண்ணிக்கை 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது, என தெரிவித்தனர்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

மேட்டுப்பாளையம் தொகுதி: ஆண்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 702 பெண்கள் 1 லட்சத்து 53 ஆயிரத்து 128, மூன்றாம் பாலினத்தவர்கள் 40 பேர் என மொத்தம் 2 லட்சத்து 96 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர்.

சூலூர் தொகுதி: 1 லட்சத்தி 55 ஆயிரத்து 035 ஆண்கள், 1 லட்சத்து 62 ஆயிரத்து 063 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 26 பேர் என மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 124 வாக்காளர்கள் உள்ளனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி: 4 லட்சத்து 65 ஆயிரத்து 728 வாக்காளர்கள்.

கிணத்துக்கடவு தொகுதி: 2 லட்சத்து 20 ஆயிரத்து 868, பேர் உள்ளனர். பொள்ளாச்சியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 49 பேர் உள்ளனர்.




கோவை வடக்கு தொகுதி: 3 லட்சத்து 38 ஆயிரத்து 648 வாக்காளர்கள் உள்ளனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி: 3 லட்சத்து 26 ஆயிரத்து 779 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை தெற்கு தொகுதி: 2 லட்சத்து 52 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர்.

வால்பாறை: இரண்டு லட்சத்து ஆயிரத்து 479 வாக்காளர்கள் உள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...