கொரோனா உள்நோயாளியாக சிகிச்சை பெற படுக்கை வசதிகள் பற்றி அறிய உதவும் இணையதளம்!

கோவை: படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை வசதிகள் எந்த மருத்துவமனையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள தமிழக அரசு இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.



கோவை: படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை வசதிகள் எந்த மருத்துவமனையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள தமிழக அரசு இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. ஏராளமானவர்கள், தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற, இடம் இல்லை என்ற தகவல் வெளியாவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, மாநிலம் முழுவதும், தனியார் மருத்துவமனைகளில் எங்கெங்கு, எவ்வளவு படுக்கை வசதிகள் காலியாக உள்ளன என்பதை, இணையதளம் வழியாக அறிந்து கொள்ள, தமிழக அரசின், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது https://stopcorona.tn.gov.in/ என்ற இணையதளத்துக்குள் சென்று, அதன் முகப்பு பக்கத்தில், தனியார் மருத்துவமனை படுக்கை நிலை என்ற பிரிவில், மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பிரிவு படுக்கை வசதி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மாவட்ட வாரியாக, மொத்தம் 456 மருத்துவமனைகளின், மொத்த படுக்கை விவரம், தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள், காலியாக உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன.

பெரும்பாலான மருத்துவமனைகளின் தொடர்பு எண்களும் தரப்பட்டுள்ளன. மக்கள், தங்கள் பகுதியில் எந்தெந்த மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு, படுக்கை வசதி காலியாக உள்ளது என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப, மருத்துமனைகளைத் தேர்வு செய்து, சிகிச்சை பெற முடியும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...