தமிழ்நாடு அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு நேர்காணல் வாழ்நாள் சான்றிதழ் அளிப்பதில் விலக்கு: கோவை கலெக்டர் சமீரன் தகவல்

கோவை: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு நேர்காணல் மற்றும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து ஊரடங்கு காரணமாக விலக்கு அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு நேர்காணல் மற்றும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து ஊரடங்கு காரணமாக விலக்கு அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுத் துறை ஓய்வூதியர்களுக்கு நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக, நேர்காணல், வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூல அலுவலகங்களில் நேர்காணல் நடைபெறுவது வழக்கம்.

நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக, கோவை மாவட்ட கருவூலத்துறை அலுவலகங்களில் நடக்கவிருந்த நேர்காணல், வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல், ‘ஜீவன் பிரமான்’ இணையதளத்தில் மின்னணு வாழ்நாள் சான்றிதழ்களை அனுப்புதல் போன்றவற்றிலிருந்து, சிறப்பினமாக கருதி விலக்களிக்கப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...