கோவை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் நாளை 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2வது டோஸ்‌ கோவிஷீல்டு தடுப்பூசி - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் நாளை நடைபெறும் முகாமில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ்‌ கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் நாளை நடைபெறும் முகாமில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ்‌ கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா நோயக்கிருமியின்‌ தாக்கத்தை கட்டுப்படுத்தும்‌ பொருட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசிகள்‌ போடப்பட்டு வருகிறது.

மார்ச்‌ 31-ம்‌ தேதிக்கு முன்‌ முதல்‌ தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட 65 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இரண்டாவது டோஸ்‌ போடுவதில்‌ காலதாமதம்‌ ஏற்படாமலிருக்கும்‌ பொருட்டும், 65 வயதிற்கு மேற்பட்டவர்களின்‌ உடல்‌ நலனை கருத்தில்‌ கொண்டும்‌, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும்‌ மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும்‌ 10.07.2021 அன்று இரண்டாவது டோஸ்‌ கோவிஷீல்டு தடுப்பூசியானது கீழ்க்கண்ட இடங்களில்‌ சிறப்பு முகாம்‌ அமைத்து ஒரு மண்டலத்திற்கு 200 நபர்களுக்கு போடப்படும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

கிழக்கு மண்டலம்‌ - ராமசெட்டி பள்ளி, வார்டு எண்‌.37

மேற்கு மண்டலம்‌ - அம்மணி அம்மாள்‌ பள்ளி, வார்டு எண்‌.23

வடக்கு மண்டலம்‌ - அரசு மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.46

தெற்கு மண்டலம்‌ - மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, வார்டு எண்‌.78

மத்திய மண்டலம்‌ - சித்தாபுதூர்‌ பள்ளி, வார்டு எண்‌.52

எனவே மேற்கண்ட வசதிகளை 65 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள்‌ பயன்படுத்தி, இரண்டாம்‌ தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும்‌ மற்றும்‌ அரசின்‌ சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி கொரோனா நோய்‌ தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ்ந்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...