கோவை மாவட்ட ஆட்சித் தலைவர்‌ உத்தரவுப்படி கோவை மாநகர காவல்‌ எல்லைக்குள்‌ வேகக்கட்டுப்பாடு நிர்ணயம்‌..!

கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி கோவை மாநகர காவல்‌ எல்லைக்குள்‌ வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி கோவை மாநகர காவல்‌ எல்லைக்குள்‌ வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி கோவை மாநகர காவல்‌ எல்லைக்குள்‌ கீழ்கண்டவாறு வேகக்கட்டுப்பாடு நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்கண்ட சாலைகளில்‌ மணிக்கு 30 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வாகனங்களை இயக்க நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.

(1) காந்திபுரம்‌ முதல்‌ கணபதி வரையிலும்‌.

(2) 100 அடி ரோடு.

(3) கிராஸ்கட்‌ ரோடு.

(4) பாரதியார்‌ ரோடு.

(5) சுக்கிரவார்பேட்டை முதல்‌ மேம்பாலம்‌ வரையிலும்‌.

(6) வைசியாள்‌ வீதி முதல்‌ செல்வபுரம்‌ வரையிலும்‌.

கோவை மாநகரில்‌ ஏணைய பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ மணிக்கு 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர எல்லைக்குள்‌ ஏற்படும்‌ விபத்துகளைக் குறைப்பது தொடர்பாக மேற்கண்ட வேகக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட வேகக்கட்டுப்பாட்டினை வாகன ஓட்டிகள்‌ மீறினால்‌ அவர்கள்‌ மீது மோட்டார்‌ வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எருக்கப்படும்‌ என கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வாகன ஓட்டிகளும்‌, பொது மக்களும்‌ மேற்கண்ட வேகக்கட்டுப்பாட்டினை தவறாது கடைப்பிடிக்குமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...