கோவை மாநகராட்சியில் UTIS-எனும்‌ ஒருங்கிணைந்த மென்பொருள்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு பரிவர்த்தனைகள்‌ முடிப்பு.!!

கோவை மாநகராட்சியில் UTIS (Urban Tree Information Systems) எனும்‌ ஒருங்கிணைந்த மென்பொருள்‌ (18.08.2021) ஆம்‌ தேதி முதல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு, இதுவரை 82,278 பரிவர்த்தனைகள்‌ (Transaction)முடிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சியில் UTIS (Urban Tree Information Systems) எனும்‌ ஒருங்கிணைந்த மென்பொருள்‌ (18.08.2021) ஆம்‌ தேதி முதல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு, இதுவரை 82,278 பரிவர்த்தனைகள்‌ (Transaction) முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, புதிய காலியிட வரி, கட்டிட வரைபட அனுமதி மற்றும்‌ அபாய மற்றும்‌ அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமக்‌ கட்டணங்கள்‌ (D&O Trade license) ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு UTIS மென்பொருள்‌ வாயிலாக சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்‌, இணையதளம்‌ வாயிலாக சொத்துவரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ செலுத்துவதில்‌ எவ்வித சுணக்கமுமின்றி பரிவர்த்தனைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள்‌ தங்களது சொத்துவரி/குடிநீர் கட்டணங்களை இணையதளம்‌ வாயிலாக செலுத்த கோவை மாநகராட்சியின்‌ (www.ccmc.gov.in) இணையதளத்தில்‌ உள்ள Online payment of Tax இணைப்பிலோ அல்லது https://tnurbanepay.tn.gov.in இணைப்பின் வாயிலாகவோ தங்களது விவரங்களை பதிவு செய்தும்‌ அல்லது நேரடியாக சொத்து வரி/குடிநீர் கட்டணங்களை Quick Payment இணைப்பின்‌ மூலமும்‌ செலுத்த இயலும்‌.

மேலும்‌ இணையதளத்தில்‌ Old assessment No/ Old Connection No தனை தேர்வு செய்து அதில்‌ (162/followed by Assessment No Eg:162/123456) உள்ளீடு செய்து, சொத்து வரி/குடிநீர்‌ கட்டணம்‌ செலுத்தலாம்‌.

அதற்குண்டான செயல்முறை விளக்கம்‌ https://youtu.be/o3iICtxpqjE என்ற இணைப்பில்‌ காணொளியாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...