உங்களுக்கு ஏற்ற சரியான ஃபேஸ் வாஷை தேர்வு செய்வது எப்படி?

வெள்ளை பருக்கள்

தினமும் காலையில் எழும் போது முகத்தில் வெள்ளைப்பருக்கள் ஹார்மோன் மாற்றங்களால் இல்லாமல், தோன்றினால், நீங்கள் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஃபேஸ் வாஷை பயன்படுத்தாமல், பென்சோயில் பெராக்சைடு உள்ள பேஷ் வாஷ்களை பயன்படுத்துங்கள்.

வறண்ட சருமம்

முகத்தை கழுவிய பின்னர் உங்களது முகம் மிகவும் இருக்கமாக உள்ளது போல உணர்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ் ஆனது உங்களது முகத்தை டிரை செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஹையலூரோனிக் ஆசிட் (Hyaluronic acid) உள்ள ஃபேஸ் வாஷை பயன்படுத்தினால், உங்களது முகத்தில் உள்ள ஈரத்தன்மை நிலையானதாக இருக்கும்.

சிவந்த தன்மை



நீங்கள் முகத்தை கழுவியதும், உங்களது முகம் சிவந்து காணப்பட்டால், நீங்கள் தவறான ஒரு ஃபேஸ் வாஷை உபயோகப்படுத்திக்
கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இது உங்களது மூக்கு மற்றும் கன்னப்பகுதிகளில் சிவந்த நிறத்தை ஏற்படுத்தும். எரிச்சலை தவிர்க்க வாசனை இல்லாத பார்முலா கொண்ட ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துங்கள். அதில் க்ளிசரின் மற்றும் ஹையலூரோனிக் அமிலம் (hyaluronic acid) உள்ளவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

எரிச்சல்

நீங்கள் முகத்திற்கு கடுமையான க்ளின்சரை உபயோகப்படுத்தினால், உங்களுக்கு முகத்தை கழுவிய உடன் அல்லது வெளியில் செல்லும் போது முகத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். இயற்கை பொருட்களால் ஆன ஃபேஸ் வாஷ் மற்றும் சல்பேட் இல்லாத பேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது.



பளபளப்பான முகம்

உங்களது முகம் எண்ணெய் பசையானதாக உள்ளது என நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறான ஒரு ஃபேஸ் வாஷை உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் எண்ணெய் பசையை உறிஞ்சும் தன்மை கொண்டவற்றை பயன்படுத்துங்கள். சாலிசிலிக் அமிலம் மற்றும் க்ளே (salicylic acid and clay) பார்முலா உள்ள பேஸ்வாஷை உபயோகப்படுத்துங்கள்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...