சென்னையை தொடர்ந்து கோவையிலும் இனி Road Ease செயலி - மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார்

Road Ease என்ற செல்போன் செயலி மூலம் கோவை மாநகர் பகுதியில் எங்கெங்கு சாலை பணிகள் நடைபெறுகிறது எந்த பகுதியில் மாற்றுப் பாதை எடுக்க வேண்டும் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை அறியலாம்.



கோவை: கோவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதோடு நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள்,சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அலுவலக நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில் கூகுள் மேப் செயலியில் போக்குவரத்து நிலவரங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தகவல்களை அப்டேட் செய்யும் வகையில் roadEase என்ற செயலியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார்.



எங்கெங்கு பணிகள் நடைபெறுகிறது, எந்த பகுதியில் மாற்றுப் பாதையில் எடுக்க வேண்டும் என்பது குறித்து இதில் அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் படி காவல்துறையில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



சென்னையில் road Ease செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது கோவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும்,முகப்பு பக்கம் குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் விவரித்தார்.



நிகழ்ச்சியின் போது செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் செய்முறை விளக்கமும் காட்டப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...