கோவையில் 49 மையங்களில் நாளை குரூப்-1 முதல் நிலை எழுத்து தேர்வு - 15,081 பேர் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் நாளை குரூப்-1 முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ள நிலையில், கோவையில் அமைக்கப்பட்டுள்ள 49 தேர்வு மையங்களுக்கும் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: 18 துணை ஆட்சியர், 26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல் நிலைத்தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்காக 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 49 மையங்களில் நாளை நடைபெறும் தேர்வை 15 ஆல்யிரத்து 81 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு மைய நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க சப் கலக்டர் தலைமையில் 5 பறக்கும்படை அலுவலர்கள், 12 மொபைல் அலுவலர்கள், 49 தேர்வுக்கூட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்கு வர வேண்டும் என்றும் அதற்கு பின்னர் வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.

விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்புநிறமை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு, இடதுகைப் பெருவிரல் - ரேகையைப் பதிக்க வேண்டும்.

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் ஈ என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும். ஓ.எம்.ஆர் விடைத்தாளில் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வு பெறும் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது 12.30 மணி முதல் 12.45 மணிவரை இந்த செயல்பாட்டினை செய்து முடித்து விடைத்தாளைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...