கோவை வனத்துறை சார்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் குறிஞ்சி வனம் திட்டத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவை மாவட்ட வனத்துறை சார்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்தார். இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.



கோவை: கோவை மாவட்ட வனத்துறை சார்பில் “குறிஞ்சி வனம்” என்ற திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று துவங்கியது.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பிள்ளையாளர்புரம் பகுதியில் துவக்கப்பட்ட மரம் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கலந்து கொண்டு மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

முதல்கட்டத்தில், இந்த வனத்தில் இளைப்புரசு, வாகை, அத்தி, மூங்கில், தேக்கு என 200 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.



இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், சலீம் அலி பறவைகள் சரணாலய முதுநிலை அறிவியலாளர் பிரமோத், மதுக்கரை வனச்சரகர் சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...