கோவைக்கு குடியரசு தலைவர் வருகை - 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கோவை ஈஷா மையத்தில் வருகிற 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ளதால் 8,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


கோவை: ஈஷா மையத்திற்கு குடியரசு தலைவர் வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காணொலி வாயிலாக தலைமைச் செயலர் இறையன்பு, கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் வருகிற 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மஹா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

குடியரசு தலைவர் கோவை வருகையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் காணொலி மூலம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவர்களுடன், துறை ரீதியாகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், குடியரசு தலைவருக்கு உரிய அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநகர போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். விழா நடக்கும் இடத்தில், ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு விதிமுறைக்கு உட்பட்டு இருக்கை வசதி செய்து கொடுக்கும் பொறுப்பு, டி.ஆர்.ஓ மற்றும் ஆர். டி.ஓ-வுக்கு கொடுக்க வேண்டும்.

சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் மருத்துவக் குழு இருக்க வேண்டும். மின் விநியோகத்தில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது. ஜென்ரேட்டர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளைச் சீரமைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஜனாதிபதி வருகையை அடுத்து, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் மூலம் ஐந்தடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

அண்டை மாவட்டங்களிலிருந்து காவலரை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....