கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக கட்டணம் உயர்வு - கோவையில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கோவையில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக டிராய் செயல்படுவதாக குற்றச்சாட்டினர்.



கோவை: மத்திய அரசின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தியுள்ள தேசிய கட்டண கொள்கை-3-ஆல் கட்டண சேனல்களில் கட்டண விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், டிராயைக் கண்டித்தும், அக்கட்டணத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும்தமிழகம் முழுவதும் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டியும், டிராய் அமைப்பை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



டிராய், பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்தப் புதிய கட்டணக் கொள்கையை அமல்படுத்தி கட்டண சேனல்களின் விலையை உயர்த்தி பொது மக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளதாகவும், இந்தக் கட்டண உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...