கோவையில் மேயர் கல்பனா தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் நாளை (பிப்.28) காலை 11 மணி முதல் 1 மணி வரை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.


கோவை: கோவை நாளைய தினம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ நாளை (28.02.2023) காலை 11.00 மணி முதல்‌ நண்பகல்‌ 1.00 மணி வரை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌ சாலை வசதி, மின் விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம்‌ அளித்து பயன்பெறலாம்‌.

இந்த கோரிக்கை மனுக்களின்‌ மீது துறை சார்ந்த மாநகராட்சி அலுவலர்களால்‌ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. எனவே, இந்த மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்திற்கு வரும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, தனிமனித இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....