வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் பற்றி எரியும் தீ - ஆன்மிக பக்தர்களுக்கு அறிவுரை

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால், மலை ஏறும் ஆன்மீக பக்தர்கள் எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.


கோவை: வெள்ளயங்கிரி மலை ஏறும் ஆன்மீக பக்தர்கள் எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கோவை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலைப் பகுதியில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் உள்ளார். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது உண்டு.

செல்லும் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அது போன்று சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி விழா ஆகிய நாட்களில் இந்த மலைக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் செல்வது உண்டு.

தற்போது மலையின் மீது செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் ஏழாவது மலைக்குச் சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகிறார்கள். இவ்வாறு வனப் பகுதி வழியாகச் செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மலை அடிவாரப் பகுதியில் மலை ஏறும் இடத்தில் வனத்துறையினர் பக்தர்களை கடும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கிறார்கள். இதற்கு இடையே வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் பக்தர்களிடம் எளிதில் தீப்பிடித்து எரியும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

அதாவது, வனப் பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளியங்கிரி மலையில் தீப்பிடித்தது உடனடியாக இந்த காட்டு தீ அணைக்கப்பட்டது. வறட்சியால் மரங்களில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து நிறைந்து காணப்படுகிறது.

எனவே மலைமீது செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய தீப்பெட்டி, பீடி, சிகரெட், கற்பூரம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு செல்ல வேண்டாம். அதுபோன்று வனவிலங்குகள் நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. வனப்பகுதியை தாங்கள் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். எனவே இதில் அனைவரும் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...