கோவை ஈஷா மையத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - த.பெ.தி.க உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு

மின் மயானத்தை பராமரிக்கும் பொறுப்புகளில் இருந்து ஈஷா விலக வேண்டும், ஈஷாவில் தொடரும் பல்வேறு மர்ம மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட முற்போக்கு இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.



கோவை: தொடர் மரணங்கள் குறித்து ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவை விசாரிக்க வேண்டும், ஈஷாவை மின் மயானத்தை பராமரிக்கும் பொறுப்புகளில் இருந்து விலகிட வேண்டும், அங்கு தொடரும் பல்வேறு மர்ம மரணங்கள் குறித்து விசாரித்து வரும் விசாரணையை சிபிசிஐடி யிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈஷாவிடம் வழங்கப்பட்டுள்ள மின் மயான பராமரிக்கும் ஒப்பந்தங்களை திரும்ப பெற்று மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் அரசாங்கமே நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஈஷாவிற்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு, உலக வன நாளான இன்று காடுகளை அழிப்பவர்களை(ஈஷா) எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம். பழங்குடியினர் மக்களின் நிலங்களை ஈஷா நிறுவனர் வாசுதேவ் அபகரித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் ஈசாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த பவதுதா(எ) கணேசனை கொலை செய்து விட்டார்களோ என்ற சந்தேகங்கள் எழுகின்றன. எனவே தமிழக அரசு அங்கு நிகழும் மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான மயானங்களை ஈஷா பராமரித்து வருவதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய தபெதிக பொதுச் செயலாளர், கு.இராமகிருட்டிணன், திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, தற்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈஷாவை பற்றி விமர்சித்துள்ளதாகவும், அறநிலையத்துறை வேண்டாம் என வாசுதேவ் கூறியபோதெல்லாம் தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டித்து உள்ளதாகவும், எனவே ஈஷா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு உட்பட பெரியாரிய மார்க்சிய அம்பேத்கரிய இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...