ஆளுநர் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும்..! - கோவையில் நடிகர் சத்யராஜ் பேச்சு

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதில்லை. ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. நல்ல காரியத்திற்கு, நல்ல திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும். சூதாட்டத்தில் பல உயிரிழப்பு ஏற்படுகிறது. சூதாட்டம் நல்லது அல்ல என்று கோவையில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநர் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும் என்று கோவையில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் சத்யராஜ் கூறியதாவது:

சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் இந்த புகைப்படம் கண்காட்சிஆரம்பிக்கப்பட்ட போது அழைத்தார்கள் போக முடியவில்லை. தற்போது கோவையில் இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்தார். வரவேண்டிய சூழ்நிலை வந்தது.

இந்த கண்காட்சியை நேரில் பார்த்துள்ளேன்.

கோவையில் போடப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சி மிகச் சிறப்பாக இருந்தது. முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்தது முதல் அனைத்து புகைப்படமும் இங்கு உள்ளது.முதல்வர் ஸ்டாலின்மிசாவில் கைதாகவில்லை என அடிக்கடி கூறுவார்கள். ஆனால் இங்கு மிசாவில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையுடன் இங்குச் சாட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் அனைத்தும் சான்றிதழ்களோடு இங்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் என்னை கவர்ந்த புகைப்படம் முதல்வர் ஸ்டாலின், கலைஞர் வேடமிட்டு பிரச்சார நாடகத்தில் நடித்துள்ளார்.எம்.ஜி.ஆர் அதனைப் பாராட்டியுள்ளார். இது திராவிட இயக்க வரலாறு. சித்தாந்தத்தின் தெளிவு இந்த புகைப்படம்.

இரண்டு ஆண்டு திமுக ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது. ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதில்லை. ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. நல்ல காரியத்திற்கு, நல்ல திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அதற்கு அவர் ஆதரவாக செயல்பட வேண்டும்.

மக்கள் நலமே முக்கியம் அதனை மனதில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மனிதாபிமானத்தோடு ஆளுநர் அணுக வேண்டும். சூதாட்டத்தில் பல உயிரிழப்பு ஏற்படுகிறது. சூதாட்டம் நல்லது அல்ல.இந்த புகைப்பட கண்காட்சியை கோவை மக்கள் அனைவரும் இங்கு வந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...