கோவையில் நாளை (ஏப்.25) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் நாளை காலை 11 மணியளவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.


கோவை: கோவையில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (ஏப்ரல் 25) நடக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ நாளை (25.04.2023) காலை 11.00 மணி முதல்‌ நண்பகல்‌ 1.00 மணி வரை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம்‌ அளித்து பயன்பெறலாம்‌.

மேலும்‌, இந்த கோரிக்கை மனுக்களின்‌ மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால்‌ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. எனவே, இந்த மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்திற்கு வரும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, தனி மனித இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...